அரசியல் களம் காணும் இம்ரான் கான் மகன்கள்? தந்தைக்கு ஆதரவாக போராட்டம்


அரசியல் களம் காணும் இம்ரான் கான் மகன்கள்?  தந்தைக்கு ஆதரவாக போராட்டம்
x

போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டால் இம்ரான்கானின் மகன்கள் கைது செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் இம்ரான்கானை விடுவிக்க கோரி அவரது கட்சியான தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகஸ்ட் 5-ந்தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் இம்ரான்கான் மகன்கள் சுலைமான், காசிம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அமெரிக்காவில் உள்ள அவர்கள் விரைவில் பாகிஸ்தானுக்கு வர உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். இதற்கிடையே போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டால் இம்ரான்கானின் மகன்கள் கைது செய்யப்படலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் ராணா சனாவுல்லா எச்சரித்து உள்ளார்.

1 More update

Next Story