‘ரஷியாவின் பயனற்ற குப்பைகளுக்கு பதிலாக எங்களிடம் இந்தியா ஆயுதம் வாங்க வேண்டும்’ - அமெரிக்க எம்.பி. பேச்சு

ஐரோப்பிய ஏர்பஸ் விமானங்களுக்கு பதிலாக போயிங் விமானங்களை இந்தியா தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி. மைக்கேல் தெரிவித்தார்.
‘ரஷியாவின் பயனற்ற குப்பைகளுக்கு பதிலாக எங்களிடம் இந்தியா ஆயுதம் வாங்க வேண்டும்’ - அமெரிக்க எம்.பி. பேச்சு
Published on: 

மாஸ்கோ,

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பாப்ஸ்(BAPS) இந்து அமைப்பு, ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், இந்து அமெரிக்க அறக்கட்டளைகள், வட அமெரிக்க ஜெயின் சங்கங்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூக அறக்கட்டளை ஆகியோர் இணைந்து சிறப்பு தீபாவளி கொண்டாட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தியா-அமெரிக்கா உறவுகள்

இந்த விழாவில், குடியரசு கட்சி எம்.பி. மைக்கேல் பாம்காட்னர், இந்திய தூதர் நம்யா கம்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய மைக்கேல் பாம்காட்னர், “நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா-அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்த இந்திய தூதர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன்.

‘ரஷிய குப்பைகள்...’

இந்தியா தனது பழைய, பயனற்ற ரஷிய குப்பைகளுக்கு பதிலாக அமெரிக்க ஆயுத அமைப்புகளை பயன்படுத்த வேண்டும். மேலும், ஐரோப்பிய ஏர்பஸ் இண்டஸ்ட்ரி தயாரிக்கும் விமானங்களுக்கு பதிலாக போயிங் விமானங்களை இந்தியா தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

X