உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

டோகோ நாடு முன்வைத்த தீர்மானத்துக்கு 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
உலக வரைபடத்தை சீரமைக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
Published on

நியூயார்க்,

கண்டங்களின் நிலப்பரப்புகளை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் உலக வரைபடத்தை சீரமைப்பதை நோக்கமாக கொண்ட ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொதுச்சபை, "வரைப டத்தைச் சீரமைத்தல், உலகளாவிய வரைபடப் பிரதிநிதித்து வத்தை சமநிலைப்படுத்துதல் மற்றும் உலகின் பிராந்தியங்களுக்கு குறிப்பாக ஆப்பிரிக்காவுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை ஊக்குவித்தல்' என்ற தீர்மானத்தை பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றியது.

டோகோ நாடு முன்வைத்த தீர்மானத்துக்கு 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. எஸ்தோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா, உக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com