பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு

பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் முன்னிலையில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்து உள்ளது.
பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு
Published on

இஸ்லாமாபாத்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் சவுத்ரி முகமது சயீத்தின் முன்னிலையில் சார்க் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்தியாவின் எதிர்ப்பை பதிவுசெய்ய இந்திய தூதரக அதிகாரி சுபம் சிங் கூட்டத்தை விட்டுச்வெளியேறினார்.

காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா கருதுகிறது மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கு எந்த அமைச்சரையும் இந்தியா அங்கீகரிக்கவில்லை.

2016 ஆம் ஆண்டில் உரி பகுதியில் இந்திய ராணுவ முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் 19-வது சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா விலகி கொண்டது. வங்காளதேசம் , பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்டதால் உச்சிமாநாடு நிறுத்தப்பட்டது. இதுவரை சார்க் கூட்டம் நடந்தது இல்லை.

ஜம்முவில் போலீசார் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட பின்னர் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை (ஐ.கே.ஜி.ஏ.) யில் பாகிஸ்தானுடன் வெளியுறவு மந்திரி அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா அழைப்பு விடுத்தது.

காஷ்மீரி தீவிரவாதிகளின் தளபதி பர்ஹான் வானிக்கு பாகிஸ்தான் தபால் தலை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com