

மாஸ்கோ
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே நடந்து வரும் 4 ஆண்டு கால போரின் ஒரு பகுதியாக, ரஷியாவில் நேற்றிரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவை சேர்ந்த பணியாளர் ஒருவர் பலியாகி உள்ளார். அவர் தவிர 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதனை ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். உயிரிழந்த இந்தியருக்கு தூதரகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 24 மணிநேரத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை உக்ரைன் நடத்தியது. அவற்றை ரஷியா இடைமறித்து தாக்கி அழித்தது. எனினும், டிரோன் தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்து உள்ளன. இதில், மாஸ்கோ நகரில் 3 பேர், பெல்கரோட் நகரில் ஒருவர் என 4 பேர் பலியானார்கள்.