ரஷியாவிடம் இருந்து 1 முதல் 2 சதவீத எரிசக்தியை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்கிறது - வெள்ளை மாளிகை

ரஷியாவிடம் ஒன்று முதல் 2 சதவீதம் மட்டுமே எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்வதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

வாஷிங்டன்,

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூத்தி செய்யப்படும் நிலையில், அதில் 1.3 சதவீதம் ரஷியாவிடம் இருந்து வாங்கப்படுகிறது

இந்த சூழலில், உக்ரைன் மீதான தாக்குதலால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. இதனால் இந்தியா மற்றும் பிற பெரிய இறக்குமதியாளாகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இதர சரக்குகளை சலுகை விலையில் வழங்க ரஷியா முன்வந்துள்ளது. அதனை ஏற்று, அந்நாட்டிடம் இருந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் பொதுத் துறை நிறுவனங்கள் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளன.

உக்ரைன் மீது படையெடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வாங்கும் இந்தியா மீது சாவதேச அரங்கில் விமாசனங்கள் எழுந்தன. இதனையடுத்து இந்தியாவின் சட்ட ரீதியான எரிசக்தி பரிவாத்தனைகளை அரசிலயாக்கக் கூடாது என்று மத்திய அரசு வட்டாரக்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ரஷியாவிடம் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்வதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், எரிசக்தி கொடுப்பனவுகளில் சில அறிக்கைகளைப் பெறுவது அனுமதி அல்ல, அது ஒவ்வொரு நாடும் எடுக்கும் முடிவு. நாங்கள் முடிவெடுத்தாலும், மற்ற நாடுகள் எரிசக்தி இறக்குமதியைத் தடை செய்ய முடிவு செய்தாலும், ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்தத் தேர்வுகளைச் செய்யப் போகிறது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

ரஷிய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை விரைவுபடுத்துவது அல்லது அதிகரிப்பது இந்தியாவின் நலன் என்று நாங்கள் நம்பவில்லை. தற்போது, ரஷிய எரிசக்தியின் உடனடி இறக்குமதி, இந்தியாவின் மொத்த எரிசக்தி இறக்குமதியில் ஒன்று முதல் 2 சதவீதம் மட்டுமே என்று ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com