

ஜாவா,
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை அமைந்துள்ளது. 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலையில் இருந்து நேற்று லேசாக புகை கிளம்பியது. இதன்பின்பு எரிமலை வெடித்து, சாம்பல் புகை வான் வரை சென்று காற்றில் கலந்தது.
இந்த எரிமலை வெடிப்பிற்கு அருகேயிருந்த வீடுகள் சேதமடைந்தன. பாலம் ஒன்றும் சேதமடைந்து உள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில், 41 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது என உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், எரிமலை வெடிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் காயமடைந்து உள்ளனர். அந்த பகுதியில் இருந்து 900 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 27 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.
மேலும் எரிமலை அருகே இருந்த 3,000-க்கு மேற்பட்ட வீடுகளும் , 38 பள்ளிகளும் சேதமடைந்துள்ளன. இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் எரிமலை அருகே வசித்தவர்கள் பலர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.