இந்தோனேசிய கால்பந்து மைதான வன்முறை விவகாரம் - கால்பந்து கிளப்பிற்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிப்பு

கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்தோனேசிய கால்பந்து மைதான வன்முறை விவகாரம் - கால்பந்து கிளப்பிற்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிப்பு
Published on

ஜகார்தா,

இந்தோனேசியாவின் மலாங்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்ததாகவும், 180-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இதே போல் அந்த கால்பந்து கிளப்பிற்கு இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com