பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் அதிபர் சந்திப்பு

ஈரான், அமெரிக்கா இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வந்தது
பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் அதிபர் சந்திப்பு
Published on

லாகூர்,

ஈரான், அமெரிக்கா இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வந்தது. இதையடுத்து இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதையடுத்து பதற்றம் தணிந்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடந்தது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியது.

பாகிஸ்தான் பயணம்

இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் இன்று பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத் சென்ற ஈரான் அதிபர் பெசஸ்கியான் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com