காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - 5 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழப்பு

கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - 5 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
Published on

காசா,

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதே சமயம், காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்கு நடுவே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று, இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பினர் காசாவில் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. பின்னர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நடந்த அமைதி மாநாட்டில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இருப்பினும் காசாவில் பாலஸ்தீன மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில், இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com