இஸ்ரேலில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்

தனது தலைநகரான டெல் அவிவ்வில் பெரியதொரு யோகா பயிற்சியை இஸ்ரேல் நடத்தவுள்ளது.
இஸ்ரேலில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்
Published on

புதுடெல்லி

பிரபலமான ராபின் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி இப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பயிற்சியை புகழ்பெற்ற யோகா குரு ரோஹித் சபர்வால் நடத்த, ஆயிரக்கணக்கானவர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

அதிகாரபூர்வமான நிகழ்ச்சியொன்று பிரதமர் மோடியின் உரையுடன் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்ச்சியின் முடிவில் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. இத்தகவல் இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்திய - இஸ்ரேல் உறவு துவங்கி 25 வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் இஸ்ரேல் செல்லவுள்ளார். அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமராவார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com