

ஜெருசலேம்,
இஸ்ரேலில் மொத்தமாக 120 இடங்களுக்கும் நாளை (அக். 27) பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கு குறைந்தது 61 இடங்கள் தேவை. 73 லட்சம் வாக்களைகளைக் கொண்ட இஸ்ரேலில், 8 சதவீத வாக்காளர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இஸ்ரேலிய வாக்குப்பதிவு நடைமுறைகளின்படி, வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள், தபால் மூலமாகவோ இணையம் மூலமாகவோ வாக்களிக்க முடியாது. இதனால், வாக்களிக்க விரும்பும் மக்கள் தேர்தல் நடைபெறும் நாளில் நேரடியாக இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்தச்சூழலில் தான், நாளை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க பல்லாயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இஸ்ரேலியர்கள் வாக்களிக்க தாய்நாடு திரும்பிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐடி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சுமார் 67 ஆயிரம் இஸ்ரேலியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி வருகிறார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இவர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் அமெரிக்காவில் இருந்தும், மற்றவர்கள் ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இஸ்ரேலியர்களில் பலர் தற்போதைய அரசுக்கு எதிரான மாற்றத்தை விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்தத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிகுட் கட்சிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவு என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துகொள்வாரா என்ற கேள்விக்கு மக்கள் நாளை செல்லும் வாக்குப்பதிவில் நிலவரம் தெரிந்துவிடும்.
இந்தநிலையில், இஸ்ரேலில் மொத்தமாக 120 இடங்களுக்கும் நாளை (அக். 27) பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில், வாக்களிக்க 73,36,553 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதனிடையே,தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கும் நாடாளுமன்றம் அமைய வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்புகளின்படி, காடி ஐசென்காட்டின் யாஷார் கட்சி, நெதன்யாஹுவின் லிகுட் கட்சியை விட கூடுதல் இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 தொகுதிகளின் ஆதரவு தேவை.
நெதன்யாஹுவின் கூட்டணியோ, எதிர்க்கட்சியோ தனித்து 61 இடங்களை பெறுவது கடினம் என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் அரபு அரசியல் கட்சிகளின் ஆதரவே புதிய அரசைத் தீர்மானிக்கும்.
2023 காசா போர் ஆரம்பித்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.