உக்கிரமடையும் போர்: காசா நகரம் சுற்றி வளைப்பு - இஸ்ரேலிய ராணுவம் தகவல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 1 மாதத்தை எட்டிய நிலையில் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது.
உக்கிரமடையும் போர்: காசா நகரம் சுற்றி வளைப்பு - இஸ்ரேலிய ராணுவம் தகவல்
Published on

டெல் அவிவ்,

கடந்த மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசிய ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது. உலக நாடுகளை கவலையடைய செய்துள்ள இந்த போர் 1 மாதத்தை எட்டியுள்ளது.

இந்த போரில் காசாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு இதுவரை 9,500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி "இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது' என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், இஸ்ரேலியப் படைகள் "காசா நகரை சுற்றி வளைத்துள்ளன" என்றும் இப்போது தெற்கு காசா மற்றும் வடக்கு காசா என்று இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com