இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: காசாவில் 17 பேர் பலி

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: காசாவில் 17 பேர் பலி
Published on

டெல் அவிவ்,

இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த போல் பாலஸ்தீனத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் போரில், காசாவில் இதுவரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com