ஜெய்சங்கர்–புதின் சந்திப்பு: இந்தியாவுக்கு உரம் தொடர்ந்து வழங்குவதாக உறுதி

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக புதின் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக புதின் தெரிவித்தார்.
ஜெய்சங்கர்–புதின் சந்திப்பு
Published on

மாஸ்கோ

ரஷ்யா அதிபர் புதினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்தியாவுக்கு உரம் தொடர்ந்து வழங்குவதாக புதின் உறுதியளித்துள்ளார்.

தனிப்பட்ட செய்தியை பகிர்ந்தனர்

இந்த சந்திப்பில் இந்தியா–ரஷ்யா இடையேயான வர்த்தகம், எரிசக்தி, உரம், அணுசக்தி, உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை புதினிடம் ஜெய்சங்கர் வழங்கினார்.

உர ஏற்றுமதி அதிகரிக்கும்

இந்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு தொடர்ந்து உரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருவதாக புதின் தெரிவித்தார். உர ஏற்றுமதியை ரஷ்யா தொடர்ந்து அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும் இந்திய விவசாயிகளுக்கும் நாட்டின் விவசாயத் துறைக்கும் பிரச்சினையைத் தீர்க்க ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்திக்க விருப்பம்

இந்தியா–ரஷ்யா இடையேயான வர்த்தகம் மீண்டும் அதிகரித்து வருவதாக புதின் கூறினார். இரு நாடுகளின் உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக புதின் தெரிவித்தார்.

பிரிக்ஸ் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு அவரை வரவேற்பதற்கு மோடி ஆவலுடன் காத்திருப்பதாக ஜெய்சங்கர் புதினிடம் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com