6 மணி நேரத்தில்.. முப்பரிமாண ரெயில் நிலையத்தை உருவாக்கிய ஜப்பான்


6 மணி நேரத்தில்.. முப்பரிமாண ரெயில் நிலையத்தை உருவாக்கிய ஜப்பான்
x
தினத்தந்தி 13 April 2025 10:59 PM (Updated: 14 April 2025 1:11 AM)
t-max-icont-min-icon

இந்த ரெயில் நிலையம், ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ,

உலகின் முதல் 3D-அச்சிடப்பட்ட ரெயில் நிலையத்தை உருவாக்கியதன் மூலம் ஜப்பான் பொது உள்கட்டமைப்பில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரெயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனமான செரெண்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த முப்பரிமாண ரெயில் நிலையம் வருகிற ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஜப்பான் மேற்கு ரெயில்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த புரட்சிகர சாதனை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமின்றி, கட்டுமானத்தில் ஜப்பானின் புதுமையின் மீதான கவனத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

1 More update

Next Story