

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 52-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள்...
ஏப்ரல் 16, 7.45 PM
ஏப்ரல் 16, 3.45 PM
ரஷியாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியாக கட்டுபாடற்ற தகவல்களையும் அரசியல் பிரசாரத்திலும் பிரிட்டன் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சம் மற்றும் அந்நாட்டின் உயர் அதிகாரிகள் சிலர் ரஷியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 16, 2.00 PM
போரில் இதுவரை ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைன் தரப்பில் 3 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். மரியுபோல் நகரில் சண்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷியா கூடுதல் படைகளை வரவழைத்துள்ளது. ரஷியா அணு ஆயுத தாக்குதலை நடத்தலாம் என்றார்.
ஏப்ரல் 16, 12.00 PM
கீவ் மாகாணத்தில் ரஷிய படையினரால் கொன்று புதைக்கப்பட்ட 900 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது - உக்ரைன் அரசு தகவல்
ஏப்ரல் 16, 11. 30AM
ரஷிய போர்க்கப்பல் மூழ்கியபோதே 3-ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டது" ரஷ்ய அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது.
ஏப்ரல் 16, 5.00 AM
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் "கணிக்க முடியாத விளைவுகள்" ஏற்படும் - ரஷியா எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால், "கணிக்க முடியாத விளைவுகள்" ஏற்படும் என அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 16, 4.00 AM
ரஷியாவை பயங்கரவாதத்தின் அரச ஆதரவாளராக நியமிக்குமாறு அமெரிக்காவிடம் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் ஜனாதிபதி ஜோ பைடனிடம் ரஷியாவை "பயங்கரவாதத்தின் அரசு ஆதரவாளராக" அறிவிக்கமாறு வேண்டுகோள் விடுத்ததாக மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 16, 3.00 AM
ரஷிய கப்பல் மோஸ்க்வா மீது உக்ரைன் 2 ஏவுகணைகளை தாக்கியதாக அமெரிக்க அதிகாரி தகவல்
மூழ்கிய ரஷிய ஏவுகணை கப்பல் மோஸ்க்வா இரண்டு உக்ரைன் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தற்போது நம்புகிறது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் உயிரிழப்புகள் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது, இருப்பினும் எண்ணிக்கை தெளிவாக இல்லை என அந்த அதிகாரி மேலும் கூறினார்.
ஏப்ரல் 16, 2.00 AM
மாரியுபோலில் நீடிக்கும் துப்பாக்கி சண்டை
முற்றுகையிடப்பட்ட நகரத்தில் உள்ள ஒரு எஃகு ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள மரியுபோலில் உக்ரைன் ரஷியா இடையே கடுமையான சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 16, 1.00 AM
உக்ரைன் மைக்கோலேவில் ஷெல் தாக்குதலில் 5 பேர் பலி
உக்ரைன் நகரமான மைகோலெய்வ் நகரில் ஷெல் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சக்தி வாய்ந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று மைகோலைவ் கவர்னர் விட்டலி கிம் டெலிகிராமில் தெரிவித்தார்.
ஏப்ரல் 16, 12.00 AM
கீவ் நகரில் 900 பேரின் உடல்கள் கண்டெடுப்பு
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியுள்ளதை தொடர்ந்து, அங்கு உக்ரைன் போலீசார் மற்றும் ராணுவம் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் அப்பாவி பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 900-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கீவ் பிராந்திய போலீஸ் படை தலைவர் ஆன்ட்ரிய் நெபிடோவ் கூறியுள்ளார்.
தெருக்களிலும், தற்காலிக புதைகுழிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த உடல்களில், துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் மக்களை தெருக்களில் நிற்க வைத்து ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
புச்சா நகரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவிலும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.