#லைவ் அப்டேட்ஸ்: போரின் முதல் நாளிலேயே உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி- புதிய தகவல்களால் பரபரப்பு

போரின் முதல் நாளிலேயே உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி நடந்திருப்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா இன்று 67-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில், இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் பின் வருமாறு:-

மே 1, 5.00 am

மே 1, 1.30 am

அதிபருக்கு குறி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து அந்தப் போர் 3-வது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் போரில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்லவும், சிறை பிடிக்கவும் ரஷியா முயற்சித்தது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் மீது போர் தொடுத்த நாளில், சில மணி நேரத்திற்குள், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும், அவரது குடும்பத்தினரையும் குறி வைத்து தலைநகர் கீவிற்கு தாக்குதல் குழுக்கள் வந்து இருக்கின்றன.

சினிமா பாணி

இதுபற்றி அதிபரின் பாதுகாப்பு படை தலைவர் ஆண்ட்ரிய் யெர்மாக் கூறுகையில், சினிமாவில்தான் இது போன்ற சம்பவங்களை பார்த்திருக்கிறோம் என தெரிவித்தார்.

ரஷியா தனக்கும், தன் குடும்பத்துக்கும் குறிவைத்திருப்பதை தனது பாதுகாப்பு படை மூலம் அறியவந்தபோதும், அவர் தப்பி ஓட மறுத்து இருக்கிறார்.

உக்ரைன் படைகள் வீதிகளில் இறங்கி ரஷியா மீது எதிர் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டபோது, மற்றவர்கள் அதிபர் மாளிகை வளாகத்தை சீல் வைக்க முயற்சித்துள்ளனர்.

அதிபர் மாளிகையை தகர்க்க முயற்சி

இதுபற்றி ராணுவ உளவுத்துறை மூத்த அதிகாரி ஒலெக்சிய் ஆரெஸ்டோவிச் கூறும்போது, பரந்த அளவில் அந்த இடம் திறந்திருந்தது. தெருவை மூட எங்களிடம் கான்கிரீட் பிளாக்குகள் இல்லை. முதல் நாள் இரவில் அதிபர் மாளிகை வளாகத்தின் அருகே துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன. அதிபரும், அவரது உதவியாளர்களும் குண்டு துளைக்காத உடைகளையும், தாக்குதல் துப்பாக்கிகளையும் பெற்றனர். அனைவருக்கும் தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.

அதிபர் மாளிகையை தகர்க்க ரஷிய துருப்புகள் 2 முறை முயற்சித்துள்ளனர். அப்போது அதிபரின் மனைவி, அவரது 9 வயது மகனும், 17 வயது மகளும் அங்கேதான் இருந்துள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட அரசுக்கு மறுப்பு

அவர் அங்கிருந்து வெளியேறி விட அவரது மெய்க்காப்பாளர்களும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகளும் கூறியும் கூட அவர் அவ்வாறு சென்று, நாடு கடத்தப்பட்ட அரசை நிறுவ மறுத்து விட்டார்.

அப்போதுதான் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, சமூக ஊடகத்தில் நாங்கள் இங்கு தான் இருக்கிறோம், நாங்கள் ஒளிந்து கொள்ள வில்லை. யாருக்கும் பயப்படவும் இல்லை என்று பதிவிட்டிருக்கிறார்.

அவர் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கொலை முயற்சிகளில் தப்பி உள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அதிபர் குற்றச்சாட்டு

இந்த நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ள உயிர்களை அழிக்க ரஷியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார்.

ஆனால் திட்டமிட்டபடிதான் உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்வதாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறி இருக்கிறார். உக்ரைனில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றி இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் முன்னேறும் ரஷிய படைகளின் முயற்சிகளை தொடர்ந்து உக்ரைன் படைகள் தடுத்து வருகின்றன. டான்பாஸ் பகுதியை முழுமையாக கைப்பற்ற ரஷியா முயற்சிக்கிறது என அமெரிக்கா கூறி உள்ளது.

உக்ரைன் எல்லையில் இருந்து வெகுதொலைவில் உள்ள பெல்கோரோட் நகரம், வெடிப்பு சத்தங்களால் நேற்று அதிர்ந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com