உக்ரைன் விமான நிலைய ஓடுதளம் மீது ரஷியா ராக்கெட் தாக்குதல்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 30 April 2022 7:46 PM GMT (Updated: 30 April 2022 7:46 PM GMT)

உக்ரைன் விமான நிலைய ஓடுதளம் மீது ரஷியா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா இன்று 67-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் 3-வது மிகப்பெரிய நகரான ஒடிசாவில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளம் மீது ரஷியா நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் விமான ஓடுதளத்தின் ஓடுபாதை முழுவதும் சேதமடைந்தது. இதனால், ஒடிசா நகரில் இருந்து விமானங்கள் இயக்குவது தடைபட்டுள்ளது.

Next Story