லண்டன் பயணம் முடிந்தது: ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்பினார்

லண்டன் பயணம் முடிந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்பினார்.
லண்டன் பயணம் முடிந்தது: ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்பினார்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர், ஷாபாஸ் ஷெரீப் (வயது 67). முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இவர் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன.

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் லாகூர் ஐகோர்ட்டு அவரது பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அவர் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி லண்டன் செல்வதாக அறிவித்தார். அவர் அங்கு 10-12 நாட்கள் தங்கக்கூடும் என அப்போது தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவர் தனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுதான் பாகிஸ்தான் திரும்பினார். லாகூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியின் தொண்டர்கள் திரளாக கூடி வந்து வரவேற்று மாதிரி நகரில் உள்ள அவரது வீடு வரை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.

ஷாபாஸ் ஷெரீப்பை வரவேற்பதற்காக அவரது கட்சித்தொண்டர்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் நேற்று முன்தினம் இரவே லாகூர் விமான நிலையத்தில் வந்து குவிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com