பாகிஸ்தானில் லாரி - பேருந்து மோதி விபத்து - 13 பேர் பலி

காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானில் லாரி - பேருந்து மோதி விபத்து - 13 பேர் பலி
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. அப்போது எதிரே வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மோசமான சாலைகள், பனிமூட்டம் மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துகள் நடப்பதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com