மலேசியா: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

மலேசியாவின் கிராமப்புற, அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, அங்கிருக்கும் மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக 'பறக்கும் டாக்டர்கள்' என்ற ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி.
Published on

மலேசியா,

மலேசியாவின் லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட மருத்துவ ஊழியர்கள் என மொத்தம் 5 பேர் பலியாகினர்.

'பறக்கும் டாக்டர்கள்' - ஹெலிகாப்டர் சேவை

மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சரவாக் பகுதியின் கிராமப்புற மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, அங்கிருக்கும் மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக 'பறக்கும் டாக்டர்கள்' என்ற ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

இந்த நிலையில், விமானி உள்பட 5 மருத்துவ ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்ற இந்த ஹெலிகாப்டர், லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com