70-வது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியானார் மைக் பாம்பியோ

70-வது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ பதவியேற்றார். #MikePompeo #US
70-வது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியானார் மைக் பாம்பியோ
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக மைக் பாம்பியோ பதவியேற்று கொண்டார். அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் முடிவில், செனட் சபை ஒப்புதல் அளித்ததையடுத்து அவர் இப்பதவியை ஏற்றுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. ஆனால், ஜனநாயக கட்சி இவரது பதவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரியாக பாம்பியோ நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிப்பதாக அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் 70-வது வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, அமெரிக்க செனட் சபையில் 57-42 என்ற விகிதத்தில் வாக்குகள் பெற்றதன் மூலம் அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

நேட்டோ நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாடு, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்த வாரம் நடைபெற உள்ள நிலையில், பாம்பியோ பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பாம்பியோ, ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை பிரஸ்ஸல்ஸ், ரியாத், ஜெருசலேம் மற்றும் அம்மான் ஆகிய நாடுகளுக்கு அவர் உடனடியாக அரசு முறைபயணமாக செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுக்குப் பதிலாக, முன்னாள் சிஐஏ இயக்குநர் மைக் பாம்பியோவை நியமிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநராக பதவி வகித்து வந்தவர் மைக் பாம்பியோ. அதிபர் டிரம்பின் நம்பிக்கையை பெற்ற இவர் வெளியுறவுத்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com