பாகிஸ்தானில் பொதுமக்கள் 11 பேரை கடத்தி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பொதுமக்கள் 11 பேரை கடத்தி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ்சில் பயணித்த 9 பேரை கடத்தி சென்றனர். பின்னர் அந்த 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதிகளில் பிணமாக கிடந்தனர். அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

அதே போல் அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்-மந்திரி மிர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com