’துணிச்சலாக முடிவு எடுங்கள்’ பாகிஸ்தான் பிரதமராகும் இம்ரான் கானுக்கு அசாருதீன் அறிவுரை

பாகிஸ்தான் பிரதமராகும் இம்ரான் கானுக்கு துணிச்சலாக முடிவு எடுங்கள் என அசாருதீன் அறிவுரை கூறி உள்ளார். #ImranKhan #Azharuddin
’துணிச்சலாக முடிவு எடுங்கள்’ பாகிஸ்தான் பிரதமராகும் இம்ரான் கானுக்கு அசாருதீன் அறிவுரை
Published on

ஐதராபாத்

பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்றம் தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களை (118) பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முயன்று வருகிறார். இதன் மூலம் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக அவர் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இம்ரான் கான் பிரதமர் பதவியேற்க உள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒரு கிரிக்கெட் வீரர் மிகவும் அரிதான ஒரு நாட்டின் பிரதமராக ஆனார் என்று மகிழ்ச்சியடைந்தார் அவர் மேலும் கூறியதாவது:-

முதலில், அவருடைய நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. முதலில் அவர் அந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். பின்னர் தான் மற்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் எடுத்த முடிவுகள் மிகவும் துணிச்சலாகவும், தனித்தன்மை கொண்டதாகவும், அந்த அணிக்கு சாதகமானதாகவும் அமைந்திருந்தது.

பாகிஸ்தான் பிரதமரான பிறகு, இதுபோன்று அவர் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதை போன்று நாட்டை தலைமையேற்று வழிநடத்துவதுவது இயலாது. எனிதும் தான் வேறுபட்ட அரசியல்வாதி என்பதை அவர் நிருபிக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் ஏராளமான வெறுப்புணர்வுடன், அதிகப்படியான ஊடுருவல் சம்பவங்கள் நடக்கும்போது, பேச்சுவார்த்தை நடைபெறுவது மிகவும் கடினம் என நினைக்கிறேன் முதலில் அந்த விஷயங்களை நிறுத்துங்கள், பின்னர் இந்தியா உடன் பேசுங்கள் . எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com