தென் கொரியாவின் சியோலில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - ஒருவர் பலி


தென் கொரியாவின் சியோலில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - ஒருவர் பலி
x

இருசக்கர வாகத்தில் சென்று பள்ளத்தில் சிக்கிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சியோல்,

தென் கொரியாவின் சியோலில் நேற்று மியோங்கில்-டோங் பகுதியில் உள்ள ஒரு சந்திப்பில் தோராயமாக 20 மீட்டர் அகலமும் 20 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளம் ஒன்று சாலையின் நடுவே திடீரென உருவானது.

இந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் உள்ளே விழுந்ததாகவும், மேலும் அந்த இடத்தைக் கடந்து சென்ற வேன் ஒன்று ஒரு பெண்ணைக் காயப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 30 வயதுடைய இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் இன்று நண்பகலுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அவசரகால அதிகாரியான கிம் சாங் சியோப் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த அந்த நபர் ஹெல்மெட் மற்றும் மோட்டார் சைக்கிள் பூட்ஸ் அணிந்திருந்ததாகவும், அவரது உடலை மீட்பதற்கு முன்னர் அவரின் மொபைல் போனை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


1 More update

Next Story