சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை

6,134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை
Published on

நேபிடாவ்,

ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மியான்மர் 1948-ம் ஆண்டு தனிநாடாக உருவானது. இதன் 78-வது சுதந்திர தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கு சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிறையில் உள்ள 6 ஆயிரத்து 134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் 52 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் கொலை, பலாத்காரம் போன்ற கடுமையான குற்றம் புரிந்தவர் தவிர மற்ற கைதிகளின் தண்டனை காலங்களும் குறைக்கப்பட்டு உள்ளன.

அதேசமயம் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனரா என்ற தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சுதந்திர தினத்தை நினைவுகூரும் விதமாகவும், "மக்களின் இதயங்களையும் மனதையும் அமைதிப்படுத்தும் மற்றும் மனிதநேயத்தை மதிக்கும்" நோக்கத்துடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாடுகளுக்கு இடையே நட்புறவைப் பேணவும், மனிதாபிமானக் கருத்துக்களை மதிக்கவும்" இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com