பனாமா பேப்பர்ஸ் வழக்கு: நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

பனாமா பேப்பர்ஸ் முறைகேடு தொடர்பாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. #NawazSharif
பனாமா பேப்பர்ஸ் வழக்கு: நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
Published on

இஸ்லமபாத்,

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான செத்துகளை நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதெடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது

.நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விரிவாக விசாரிக்கும்படி தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.அதன்படி நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவி கல்சூமை கவனித்துக்கொள்ள லண்டனில் உள்ளேன். எனவே, அடுத்த வாரம் தான் பாகிஸ்தான் திரும்ப உள்ளதால், அதுவரை தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப், நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். நவாஸ் ஷெரீப்பின் இந்த கோரிக்கையை, நீதிபதி இன்று பரிசீலித்து முடிவு எடுப்பார் என தெரிகிறது.

எனவே, நவாஸ் ஷெரீப் கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. அதேவேளை நிராகரிக்கப்பட்டால், தீர்ப்பு இன்றே வெளியாகும் என தெரிகிறது. தீர்ப்பு வெளியிடப்படும் அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள், நேரில் ஆஜராக வேண்டும் என்று தேசிய பொறுப்புடமை கோர்ட் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது

தீர்ப்பு, நவாஸ் ஷெரீப் குடும்பத்திற்கு எதிராக வெளியானால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது மிகப்பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. நவாஸ் ஷெரீப்பின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணையிக்கும் வழக்கு என்பதால், பாகிஸ்தானில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com