பாகிஸ்தான்: கார் டிரைவர் இறப்பைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 11 பேர் காயம்..!

பாகிஸ்தானில் கார் டிரைவர் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

குவெட்டா,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் நொக்குண்டி மற்றும் டல்பாண்டின் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 15-ந்தேதி அனுமதியின்றி வேகமாகச் சென்ற கார் டிரைவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. ஏராளமானோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் தொடங்கியது.

பெரும்பாலான லாரிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாகாண செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய அடக்குமுறையில் சுமார் 11 பேர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com