நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 157 ஆக உயர்வு; 400-க்கும் மேற்பட்டோர் மாயம் - உதவி எண்கள் அறிவிப்பு

கடந்த 14 மாதங்களில் 2 முறை லெண்டே கோலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நேபாள பெருவெள்ளம்:  உயிரிழப்பு 157 ஆக உயர்வு; 400-க்கும் மேற்பட்டோர் மாயம் - உதவி எண்கள் அறிவிப்பு
Published on

காத்மாண்டு

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்ந்து உள்ளது. 400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதியில், லெண்டே கோலா ஆறும், பிற சிறிய ஆறுகளும் ஒன்றிணைந்து 'போடேகோஷி' ஆறாக கீழ்நோக்கி பாய்கின்றன.

திடீர் வெள்ளப்பெருக்கு

இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. மின்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 93 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 100-க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை.

தமிழர்கள் 37 பேர்

இந்த நிலையில், நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 341 பேர் வெளிநாட்டினரும், 28 பேர் பாதுகாப்பு படையினரும் அடங்குவர்.

இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த 57 பேரும் உள்ளனர். இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 37 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.

வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.

தமிழக அரசு அவசர உதவி எண்

அவர்களை மீட்க தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712 ஆகும்.

இந்திய தூதரகம்

இதேபோன்று, நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்கு, +977 985 131 6807 மற்றும் +977 970 910 7500 ஆகிய அவசரக்கால எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பேரிடரை தொடர்ந்து தேசம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என கேட்டு கொண்டார். தயவு செய்து பொறுமையாக இருங்கள். உங்களுடைய மீட்பு, சிகிச்சை, உணவு மற்றும் புகலிடத்திற்கு அரசு முழு பொறுப்பேற்கிறது. இதுபோன்ற பேரிடர் தருணத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவிடம் மீட்பு பணிக்கு உதவும்படி நேபாள அரசு கேட்டு கொண்டுள்ளது.

என்ன காரணம்?

கடந்த 14 மாதங்களில் 2 முறை லெண்டே கோலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த முறை நேபாள பகுதியில் பனிப்பாறை உடைந்தும், பனிச்சரிவு ஒன்றும் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆற்றின் போக்கை மறித்ததும், இதன்பின்னர் திடீரென கீழ்நோக்கி பெருகி வெள்ளம் ஓடியது என்றும் பேரிடர் ஆபத்து குறைப்புக்கான நிபுணர் சன்யால் கூறுகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com