

ரோல்பா:
நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
ரோல்பா மாவட்டத்தின் தபாங் கிராமப்புற நகராட்சி பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 800 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் ரோல்பா மாவட்ட போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அந்த பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் வழுக்கும் தன்மையுடன் இருந்ததே ஜீப் கட்டுப்பாட்டை இழக்கக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.