வெள்ளம் பேரிடருக்கு இந்த 3 நாடுகளே காரணம்..நேபாளம் காட்டம்

பசுமைக்குடில் வாயு உமிழும் முதல் மூன்று நாடுகளாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்திய உள்ளன என நேபாளம் குற்றம்சாட்டி உள்ளது.
நேபாளம் காட்டம்
நேபாளம் வெள்ளம்
Published on

காத்மாண்டு,

திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண், சேறு- சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கா னோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

நேபாளத்தில் 2-வது வாரமாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்களை நேபாள ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.

உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3,800 பேரைத் தேடும் பணி 8-வது நாளாக தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், நேபாள பேரிடருக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குவதாகவும், இதற்காக அதிகளவில் பசுமைக்குடில் வாயு உமிழும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் பொறுப்பேற்று காலநிலை இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் காத்மாண்டு போஸ்ட் செய்திக்கு அளித்த பேட்டியில் நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கானல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது:-

"நேபாள பேரிடர் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. உலக வெப்பமயமாதலுக்கு கணிசமான அளவில் பங்களிக்கும் பசுமைக்குடில் வாயு உமிழும் முதல் மூன்று நாடுகளாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்திய உள்ளன. இந்தியாவும் சீனாவும் நேபாளத்துக்கு அண்டை நாடுகளாகவும், பசுமைக்குடில் வாயுவை அதிகளவில் உமிழும் நாடாக அமெரிக்காவும் உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com