இஸ்ரேல் சுதந்திர தினம்; பிரதமர் மோடிக்கு நெதன்யாகு அழைப்பு

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டு வருவதாக நெதன்யாகு கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு நெதன்யாகு அழைப்பு
Published on: 

பெர்லின்,

இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் வீரமிக்க இந்திய விமானி ஒருவருடன் இணைந்து தீபம் ஏற்றுமாறும் மோடியை அவர் அழைத்துள்ளார்.

இதுகுறித்து நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

“எனது நண்பரும் இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று, வீரமிக்க இந்திய விமானி ஒருவருடன் இணைந்து தீபம் ஏற்ற அவருக்கு அழைப்பு விடுத்தேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த அழைப்புக்கு மோடி நன்றி தெரிவித்ததாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா–இஸ்ரேல் இடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருவதை இரு தலைவர்களும் வரவேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் அவர்கள் உறுதி தெரிவித்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழல் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com