ஓராண்டில் 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு புதிய முதலீடுகள்: டிரம்ப் பேச்சு

அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்திற்கும் கூடுதலான பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி நடக்கிறது.
ஓராண்டில் 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு புதிய முதலீடுகள்:  டிரம்ப் பேச்சு
Published on

வாஷிங்டன் டி.சி.

அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் இன்று கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, 12 மாதங்களுக்கு முன்பு நான் இதே அறையில் பேசும்போது, பொருளாதார மந்தநிலை, வரலாறு காணாத பணவீக்கம், உள்நாட்டில் அதிகரித்த குற்ற விகிதம், உலகம் முழுவதும் போர்களும், அமளியும் என்ற சூழல் இருந்தது.

ஆனால் ஓராண்டில், வேறு யாரும் படைக்காத சாதனையை நாம் படைத்திருக்கிறோம் என பெருமையுடன் என்னால் கூற முடியும். இது அமெரிக்காவின் பொற்காலம். கடந்த 4 ஆண்டு கால அரசில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்த புதிய முதலீடுகள் என்ற நிலையை ஓராண்டில் 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு நான் மாற்றியுள்ளேன் என்றார்.

Also Read
ரூ.18.64 கோடி மதிப்பிலான முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஓராண்டில் 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு புதிய முதலீடுகள்:  டிரம்ப் பேச்சு

குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான புதிய தொழிற்சாலைகள், ஆலைகள், ஆய்வகங்கள் உருவாகி வருகின்றன.

அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்திற்கும் கூடுதலான பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி நடக்கிறது. புது நண்பரான வெனிசுலாவிடம் இருந்து 8 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய்யை நாம் வாங்கி இருக்கிறோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com