நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
Published on

வெல்லிங்டன்,

நியூசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com