பிறந்த சில மணி நேரத்திலேயே ‘கூல் போஸ்’ கொடுத்த பச்சிளம் குழந்தை

குழந்தைக்கு மருத்துவர்கள் தங்களின் வழக்கமான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தனர்.
பிறந்த சில மணி நேரத்திலேயே ‘கூல் போஸ்’ கொடுத்த பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தை
Published on: 

எகிப்து,

பொதுவாக, தாய் வயிற்றிலிருந்து இந்த பூமிக்கு வரும் பச்சிளம் குழந்தைகள், பிறந்தவுடன் அழுதுகொண்டுதான் இருக்கும். இன்னும் சில நாட்களுக்கு அதன் அழுகை சத்தம் வீட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், இங்கே ஒரு அதிசய குழந்தை, பிறந்த சில மணி நேரங்களிலேயே எந்த ஒரு சலனமும் இன்றி, பெரியவர்கள் ஓய்வெடுப்பது போல ஹாயாக படுத்துக்கொண்டு ‘கூல் போஸ்’ கொடுத்து அசத்தியுள்ளது.

பச்சிளம் குழந்தை

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அங்கு பிறந்த சில மணி நேரங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு, மருத்துவர்கள் தங்களின் வழக்கமான ஸ்டெதாஸ்கோப் பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தனர்.

குழந்தையின் கூல் போஸ்

அப்போது மருத்துவ படுக்கையில் படுத்திருந்த அந்த குழந்தை, சற்றும் பதற்றமோ பயமோ இன்றி, தனது இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் முட்டு கொடுத்துக் கொண்டு, கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக போட்டபடி செம ‘கூல்’ ஆக படுத்திருந்தது.

இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த அங்கிருந்த குழந்தை நல மருத்துவர், அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி உலகளவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் பாணியில் விதவிதமாக நகைச்சுவை கமெண்ட்களை தட்டிவிட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com