இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களுக்கு 25-ந்தேதி வரை சிறை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களுக்கு 25-ந்தேதி வரை சிறை
Published on

கொழும்பு,

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அந்த வகையில் மீனவர்கள் சிலர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். அந்த படகில் 9 மீனவர்கள் இருந்தனர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகின் என்ஜின் பழுதாகி, இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியதால் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இதையடுத்து மீண்டும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 9 மீனவர்களையும் வரும் 25-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com