

வாஷிங்டன்,
ரஷியா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் இருதரப்பிலும் கணக்கில் அடங்காத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறும்போது,
இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மூன்று வாரமாக நீடிக்கும் இந்த போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர ரஷியா எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஒருபுறம், நாளின் ஒவ்வொரு நிமிடமும் குண்டுவீச்சுக்கு உள்ளான உக்ரைன், தொடர்ந்து அவர்களுக்கு ஈடு கொடுத்து பதில் தாக்குதல் நடத்திவருவதற்காக உக்ரைனுக்கு பாராட்டுக்கள். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவுகளை ரஷியா மேற்கொள்ளவேண்டு,ம். இவ்வாறு ஆண்டனி பிளிங்கன் கூறினார்.