வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா - வெள்ளை மாளிகை தகவல்

ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

ரஷியா-உக்ரைன் போரில் சமீப காலமாக இருநாடுகளும் தங்களுடைய தாக்குதல் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன் தினம் உக்ரைனின் கீவ், கார்கீவ் நகரங்களை நோக்கி ரஷிய போர் விமானங்கள் ஊடுருவின.

ரஷியா தனது ஆயுத கிட்டங்கில் பலம் வாய்ந்த கின்சால் ஏவுகணைகள், உக்ரைன் நகரங்கள் மீது குறிவைத்து சரமாரியாக வீசப்பட்டன. ரஷியா தன்னிடம் உள்ள பலம் வாய்ந்த கின்சால் ஏவுகணைகளை, உக்ரைன் நகரங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் இந்த ஏவுகணைகள், உக்ரைனின் வான்பாதுகாப்பு தளவாடங்களை மீறி கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.

இந்த தாக்குதலில் வானுயர கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து நொறுங்கின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உக்ரைன் நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா சமீபத்தில் ரஷியாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்களை வழங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுடன் அமெரிக்கா வளர்ச்சியை உறுதியாக எழுப்பும். ரஷியாவிற்கு வட கொரியாவின் ஆயுத பரிமாற்றம் 'குறிப்பிடத்தக்கது'. இந்த ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும்.

ஈரான் ரஷியாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கவில்லை, ஆனால் ஈரானிடம் இருந்து ஏவுகணை அமைப்புகளை ரஷியா வாங்க விரும்புவதாக வாஷிங்டன் நம்புகிறது. உக்ரைனுக்கு எதிரான டிரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களுக்காக மாஸ்கோ ஈரானை பெரிதும் நம்பியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com