உலகளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் குறைந்துள்ளது - அமெரிக்கா

உலகளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் குறைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை கூறுகிறது.
உலகளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் குறைந்துள்ளது - அமெரிக்கா
Published on

வாஷிங்டன்

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் இத்தாக்குதல்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அளவில் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தாக்குதல்களில் இறப்போரின் எண்ணிக்கையும் 13 சதவீதம் குறைந்துள்ளது என்கிறது அறிக்கை.

ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் குறைந்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. தாக்குதல்களுக்கு பெரும்பாலும் ஐஎஸ் இயக்கம் காரணமாக இருந்துள்ளது. ஈராக்கில் இந்த இயக்கம் 20 சதவீத அதிகமான தாக்குதல்களையும் 69 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று வெளியுறவுத் துறைக்காக தொகுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி உலகம் முழுதும் 11,072 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 25,600 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 6,700 பேர் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் 104 நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. எனினும் பெரும்பாலான தாக்குதல்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ்சில்தான் நடந்துள்ளன. தீவிரவாதத் தாக்குதல்களில் இறந்தவர்களில் நான்கில் மூன்று பகுதி ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com