ரஷியாவில் வினோதம்: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் - பெண்களை விட ஆண்கள் அதிகம் குவிந்தனர்

ரஷியாவில் நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற வினோத சலுகை அறிவிக்கப்பட்டது.
ரஷியாவில் வினோதம்: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் - பெண்களை விட ஆண்கள் அதிகம் குவிந்தனர்
Published on

மாஸ்கோ,

ரஷியாவின் மத்திய பகுதியில் உள்ள சமாரா நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் வினோத சலுகை ஒன்றை அறிவித்து விளம்பரப்படுத்தினார்.

அதன்படி பெட்ரோல் நிலையம் திறந்த பிறகு முதல் 3 மணி நேரத்துக்குள் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பெண்கள் நீச்சல் உடையில் வந்து இலவச பெட்ரோலை பெற்று செல்வார்கள். இதன் மூலம் பெட்ரோல் நிலையம் கவர்ச்சிகரமான இடமாக மாறி மக்களிடம் பிரபலமாகிவிடும் என உரிமையாளர் நினைத்தார். ஆனால் நடந்தது வேறு. இலவச பெட்ரோல் குறித்த விளம்பரம் வெளியானதும் ஏராளமான ஆண்கள் நீச்சல் உடையை அணிந்து கொண்டு பெட்ரோல் நிலையத்துக்கு வந்தனர்.

நீச்சல் உடை அணிந்து வர வேண்டியவர்கள் ஆண்களா, பெண்களா என விளம்பரத்தில் குறிப்பிடாததால் பெட்ரோல் நிலையத்தில் பெண்களை விட ஆண்களின் கூட்டம் அலை மோதியது. இதனால் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் திணறிப்போனார்கள். சலுகைக்கான கால அவகாசம் முடிந்த பின்னரே அவர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இதற்கிடையே ஆண்கள் நீச்சல் உடையில் வந்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com