காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு பாகிஸ்தான் மீண்டும் கடிதம்

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு பாகிஸ்தான் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு பாகிஸ்தான் மீண்டும் கடிதம்
Published on

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து சர்வதேச சமுதாயமும், ஐ.நா.வும் இந்தியாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு கடந்த 4-ந் தேதி கடிதம் எழுதியதுடன், 8-ந் தேதி தொலைபேசியிலும் பேசினார்.

இந்நிலையில் மீண்டும் குரேஷி ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிஷேல் பாச்லெட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் நடவடிக்கைகள் ஐ.நா.வின் தனியுரிமை, பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம், சர்வதேச சட்டம் மற்றும் இந்தியாவின் சொந்த வாக்குறுதிகளையும் அப்பட்டமாக மீறுவதாகும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com