நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்பு

வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தையை எவ்வித காயமுமின்றி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டது
மீட்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை
Published on

காத்மாண்டு,

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய 45 நாட்களேயான (ஒன்றரை மாத) பச்சிளம் குழந்தை ஒன்றை நேபாள பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

திடீர் பெருவெள்ளம்

நேபாளத்தின் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ரசுவா மாவட்டத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஆற்றின் போக்கில் உள்ள நகரங்கள், கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் மாடிகளிலும், உயரமான பகுதிகளிலும் தஞ்சமடைந்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணி

நேபாள ராணுவம் மற்றும் ஆயுதக் காவல் படையினர் நேபாளத்தின் பாக்மதி மாகாணத்திற்கு உட்பட்ட ரசுவா மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தையை எவ்வித காயமுமின்றி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக ரசுவா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 'துன்சே' தற்காலிக அவசரக்கால மீட்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெள்ளப் பாதிப்பிலிருந்து பச்சிளம் குழந்தைகளை ராணுவ வீரர்கள் தங்களின் நெஞ்சோடு அணைத்து, தாலாட்டிப் பாதுகாத்த நெகிழ்ச்சியான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com