உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: கிண்டலாக மீம் பதிவிட்ட எலான் மஸ்க்

பேஸ்புக், இன்ஸ்டா திடீரென முடங்கியதால் எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க் கிண்டலாக மீம் பதிவிட்டுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் (முன்பு டுவிட்டர்), வாட்ஸ்அப் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில், தங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்பட பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்த கூடிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை இன்றிரவு 8.30 மணியளவில் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கும் கூடுதலாக இவற்றின் சேவை பாதிக்கப்பட்டது. அவற்றின் செயலிகள் செயல்படவில்லை. இதனால், தகவல் தொடர்பு கிடைக்காத சூழலில், மக்கள் பரிதவித்து வந்தனர். இணைய வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்தனர்.

இதனால் விரக்தியடைந்த பயனாளர்கள் சமூக ஊடகங்களில், குறிப்பாக எக்ஸ் வலைதளத்தில் (டுவிட்டர்) பேஸ்புக், இன்ஸ்டா முடங்கியது தொடர்பான தங்களது இடையூறுகள் மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க், போட்டியாளரான சமூக ஊடக நிறுவனமான மெட்டாவை கிண்டல் செய்து, "நீங்கள் இந்த பதிவினை படிக்கிறீர்கள் என்றால், எங்கள் சேவையகங்கள் செயல்படுவதால் தான்.." என்று தெரிவித்துள்ளார். மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமை கிண்டல் செய்யும் விதமாக மீம் ஒன்றை எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com