பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

இஸ்லாமாபாத்,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,039 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 69,496 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு நேற்று 88 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 25,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை 5,47,030 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com