பாலகோட் விமானப்படை தாக்குதலில் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது - பாகிஸ்தான் ராணுவம்

பாலகோட் விமானப்படை தாக்குதலில் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
பாலகோட் விமானப்படை தாக்குதலில் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது - பாகிஸ்தான் ராணுவம்
Published on

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி இறுதியில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெரும் இழப்பு நேரிட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது என கூறிவருகிறது.

இப்போதும், இந்தியா நடத்திய பாலகோட் விமானப்படை தாக்குதலில் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. அங்கு உண்மையை பார்க்க வேண்டும் என்று விரும்பினால் இந்திய பத்திரிக்கையாளார்கள் அங்கு சென்று பார்வையிட தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளது.

பாகிஸ்தான் முதலில் சர்வதேச பத்திரிக்கையாளர்களை அங்கு அனுமதிக்கவில்லை . சம்பவம் நடந்து 40 நாட்கள் ஆன பின்னர்தான் அனுமதி கொடுத்தது. அப்போது உள்ளூர் மக்கள் பேசுகையில் வெடிகுண்டு சத்தம் கேட்டது என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com