இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன்

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறி இந்திய தூதரக அதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன்
Published on

இஸ்லமாபாத்,

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்து விட்டதாகவும் கூறி, பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தின் தற்காலிக துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய பாகிஸ்தான், அவரை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஷக்கோட் செக்டாரில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலில், ஆசியா பிபி என்ற பெண் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் காயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கின்றது. எல்லையில் வசிக்கும் கிராமங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com