பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் உயிரிழப்பு

5 போலீஸ் வாகனங்களுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்தனர்.
பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் உயிரிழப்பு
Published on: 

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை தடுக்க போலீசார் நேற்று மதியம் வாகனங்களில் ரோந்து சென்றனர். அப்போது அருகிலுள்ள மலை உச்சியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த பயங்கர தாக்குதலில் 10 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 போலீஸ் வாகனங்களுக்கும் பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X