பாகிஸ்தான்: பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான்: பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் பலி
Published on

குவெட்டா,

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து பஞ்ச்குர் என்ற இடத்திற்கு 40 பயணிகளுடன் நேற்று பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்தபேருந்து லாஸ்பெல்லா அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே தாறுமாறாக வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

எதிரே வந்த லாரியில் டீசல் இருந்ததால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீப்பிழம்புகள் பேருந்தில் வேகமாக பரவியதால் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

இந்த துயரச் சம்பவத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானில் இது போன்ற சாலை விபத்து சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதற்கு, அங்குள்ள தரமற்ற சாலைகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com