பாகிஸ்தான்: வாகனம் கவிழ்ந்து 5 போலீசார் பலி; 3 பேர் காயம்

பாகிஸ்தானின் கராச்சி நகரின் சச்சால் பகுதியில் போலீஸ் வாகனம் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டதில், 3 போலீசார் காயமடைந்தனர்.
பாகிஸ்தான்: வாகனம் கவிழ்ந்து 5 போலீசார் பலி; 3 பேர் காயம்
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹப் மாவட்டத்தில், போலீசாரை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்றது. இந்நிலையில், அந்த வாகனத்தின் டயர் திடீரென வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில், போலீசார் 5 பேர் உயிரிழந்தனர். 3 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், கராச்சியின் சச்சால் பகுதியில் போலீஸ் வாகனம் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில், 3 போலீசார் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு முன், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நசீராபாத் நகரின் தேரா முராத் பகுதியில் போலீசாரின் ரோந்து வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அந்த பகுதியை போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com